வேலூர் மாவட்டம், குடியாத்தம், சுண்ணாம்பேட்டை பகுதியில் நேற்று(17.7.2025) அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் ஓட்டுநரும் நடத்துநரும் பரோட்டா வாங்குவதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். பேருந்து நிறுத்தப்பட்ட இடம் குறுகிய சாலையாக இருந்ததால், அவ்வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று பேருந்தைக் கடக்க முடியாமல் அதே இடத்தில் தடைப்பட்டு நின்றுள்ளது.. நடத்துநரும் பேருந்திலிருந்து இறங்கி உணவகத்திற்குப் பரோட்டா வாங்கச் சென்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இச்செயலில் ஈடுபட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும். அவர்களை முறையான பயிற்சிக்கு அனுப்பப்பட்டு இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

பரோட்டா வாக்குவதற்காக வண்டியை நிறுத்தியதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.