தனது வீட்டிற்கு மட்டும் அடிக்கடி கரெண்ட் தடைபட்டதால் ஆத்திரமடைந்த நபர் அவர் வசித்த பகுதியில் இருந்த ட்ரான்ஸ்பார்மர்களில் பியூஸ்களை பிடுங்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் காசர்கோடில் சில இடங்களில் முற்றிலும் மின்சாரம் தடைப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அப்போது மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்ததில் பல இடங்களில் ட்ரான்ஸ்பார்மர்களில் பியூஸ்கள் அகற்றப்பட்டிருந்து தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ஆய்வு செய்ததில் சுமார் ஏழுக்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்பார்மர்களில் பியூஸைகளை அகற்றியது தெரிந்தது. 

Advertisment

போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த நபர் திட்டமிட்டு பியூஸ்களை அகற்றியது தெரிந்தது. மேலும் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் வயதான தாய், தந்தையுடன் வசித்து வரும் தன்னுடைய வீட்டுக்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் ட்ரான்ஸ்பார்மர்களின் பியூஸை கழட்டியது தெரிவந்தது. மேலும் அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்  என்பது தெரிந்த நிலையில் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.