புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11.25 மணி அளவில் விஜய் பேசினார். அப்போது அவர், “புதுச்சேரியில் உள்ள அரசின் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எவற்றிலும் கண்டிக்கவில்லை என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா? கண்டுகொள்ளவில்லை. இங்கே வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவே இல்லை என்று கேள்விப்படுகிறோம். இந்த புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை.
மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டு பலமுறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வருடம் கூட கடந்த மார்ச் மாசம் 27ஆம் தேதியில் (2025) ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதில் மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பிய 16வது தீர்மானம் ஆகும். புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள் பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு இதுவரைக்கும் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக எதையுமே செய்யவில்லை.
இங்கே ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை அதைப் பற்றி யார் பேசினாலும் அது அவர்கள் காதில் விழவே இல்லை. இங்கே ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு இன்னொருத்தரை நியமித்து 200 நாள் ஆச்சு. இன்னும் அவருக்கு இலாகாவே தரவில்லை. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவது என்று அந்த மக்களே சொல்கிறார்கள். புதுச்சேரியுடைய முக்கிய அங்கமாக உள்ள காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் எல்லாம் முன்னேற்றமே இல்லை என்று அந்த பகுதி மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலை மொத்தமா கைவிட்ட மாதிரிதான் இருக்கிறது. இது எல்லாமே முன்னேற்றம் அடைய வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/09/tvk-vijay-angry-1-2025-12-09-13-02-26.jpg)
சுற்றுலா தளமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங் (வாகன நிறுத்துமிடம்) வசதி இல்லை. போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லை. இதனை எல்லாமே மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று தான் சொல்லவேண்டும். இந்த திமுகவை நம்பாதீர்கள். அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் அவர்கள் வேலையே. நான் சொன்ன பல கோரிக்கைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கும் (நம்ம) புதுச்சேரி அரசுக்கும், அதன் மக்கள் திட்டங்களுக்கும் ரொம்ப அக்கரையா உண்மையாகத் துணை நிற்கிறோம்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/tvk-vijay-vanakkam-1-2025-12-09-13-01-41.jpg)