Advertisment

'சும்மா தெரியாம உளறாதிங்கண்ணா..'-விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்

A5369

'Don't just laugh without knowing..' - Poster pasted against Vijay Photograph: (TVK)

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று மூன்றாவது கட்டமாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.  விஜய் வருகையை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
விஜய் வருகையையொட்டி சில எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அப்படி ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா! உங்க FACTSலாம் செக் பண்ணுங்கண்ணா! சும்மா தெரியாம உளறாதிங்கண்ணா! தமிழ்நாட்டு வளர்ச்சியை பாருங்கண்ணா!' போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   
Advertisment
namakkal district Poster tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe