'Don't just do that...' - Sudden instruction to DMK executives Photograph: (dmk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது
இந்நிலையில் திமுக தலைமை தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் எடுத்து அறிவிப்பார். கூட்டணி தொகுதிப்பங்கீடு தொடர்பான கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். கூட்டணி கட்சியினர் குறித்தும் திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்சியினர் செயல்பட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எந்த பயனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்' என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
Follow Us