பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை குறிவைத்து கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.  அதனை தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தப்படுவதாக அறிவித்தது.

Advertisment

இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான், செர்பியா - கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா,  ஆகிய போரை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைய ட்ரம்ப் வகித்த பங்கு முக்கியமானது என பாகிஸ்தான் குறிப்பிட்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கம்போடிய பிரதர்ம் ஹின்மோனட் ஆகியோர் டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என நோபல் கமிட்டிக்கு பரிந்துரைகளை அனுப்பினர்.

Advertisment

அதனை தொடர்ந்து, அர்மேனியா - அஜர்பைஜான் இடையிலான போர் பதற்றத்தை டொனால்ட் டிரம்ப் நிறுத்தி இருநாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தை போட்டார். இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்வு காண உதவிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இரு நாடுகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவர்கள், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.

இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்புக்கு கொடுக்க வேண்டும் என்று பல நாட்டு தலைவர்கள் பரிந்துரைத்த நிலையில், டிரம்புக்கு பரிசு கிடைக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப்பின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் 10ஆம் தேதியன்று அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment