Dogs bite and 21 sheep; Residents in Vandavasi shocked Photograph: (thiruvannamalai)
திருவண்ணாமலை அருகே வந்தவாசி பகுதியில் 21 ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தென்னாங்கூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு சொந்தமான ஆட்டு பட்டிக்குள் புகுந்த 4 நாய்கள் கடித்துக் குதறியதில் 21 ஆடுகள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மற்றும் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பூதாகரமாகி வரும் நிலையில் 21 ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.