Dog stuck on balcony roof! Rescued by firefighters! Photograph: (DOG)
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றிருந்தார். ஆனால் அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய், எதிர்பாராத விதமாக 2-வது மாடி பால்கனி மேலுள்ள மேற்கூரை சுவற்றில் சிக்கிக்கொண்டது.
கீழே இறங்க வழியில்லாமல், மேலேயே நின்றபடி அந்த நாய் மூன்று நாட்களாக தவித்தது. பசி, தாகம், பயம் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு பரிதவித்த அந்த நாயின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பக்கத்து கட்டிடத்தின் வழியாக மேலே சென்று, கயிறு கட்டி லாவகமாக அந்த நாயை கீழே இறக்கினர். எந்தவித காயமும் இல்லாமல், அந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.
பீதியை தாண்டி, சுதந்திரமாக ஓடிய அந்த நாயின் உற்சாகம், அங்கிருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள, கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Follow Us