Dog bites boy - panic in Nellai Photograph: (cctv)
நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் மனிதர்கள் நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லையில் விளையாண்டுவிட்டு வீட்டிற்கு ஓடி வந்த ஐந்து வயது சிறுவனை தெருநாய்கள் துரத்திச் சென்று கடித்து குதறும் காட்சிகள் ஒன்று வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுவனுடைய சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.