Advertisment

அமைச்சரின் மக்கள் நலன் முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டையாகச் செயல்படும் மருத்துவர்கள்!

cancer-doctor

தமிழக சுகாதாரத்துறையில் தொடர்ச்சியாக மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் எனப் புதிது புதிதாகத் திட்டங்களையும் உருவாக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. செயல்பட்டுவருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் அதிகப்படியாக மக்கள் கேன்சர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காகச் சென்னை மருத்துவமனையை நாடும் அவலம் நடந்துகொண்டே இருந்துள்ளது.அதுவும் பெண்கள் குழந்தைகளும் கூடுதலாக வருவதே கொடுமையாக இருப்பதாகவும், குடும்பம் குழந்தைகளை விட்டு சென்னையில் வந்து சிகிச்சை பெறும் வரையிலும்  சிரமாகவும் உள்ளது என அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் அதனை உணர்ந்த  அமைச்சர் மா.சு உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 16 மாவட்டங்களில் 16 கோடி செலவில் புதிதாக கேன்சர் துறையைக் கூடுதலாக உருவாக்கி அத்துறைகளுக்கு மருத்துவர்களை நியமிக்க பணியை முடித்து அதற்கான மருத்துவர்களை நீயமன் செய்ய எம்.ஆர்.பி போர்ட் மூலமாக 59 மருத்துவர்களுக்கான நியமனத்திற்கான அறிவிப்பை 3.11.25 தேதி அன்று அறிவித்துள்ளது. அதன் மூலமாகத் தேர்வில்  தேர்ச்சிபெறும் மருத்துவர்களை நியமனம் செய்யவும் உள்ளனர்.

Advertisment

இப்படி மக்களின் நலனுக்காகச் செயல்படும் அமைச்சருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அதே கேன்சர் துறையில் தற்போதுள்ள அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையிலே பணிபுரியாமலே தனியார் மருத்துவமனைகளிலே பணிபுரிந்தும் வருகிறார்கள் மேலும் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை இந்த மருத்துவர்கள் பணிபுரியும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் வருகிறார்கள். இந்த ஸ்கேம் நிப்பாட்டினாலே இந்த ஏழை எளிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என அதே மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். 

Advertisment

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும் அதுவும் அரசுப் பணியில் இருக்கும் நேரத்திலே தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது என்னச் சொல்ல, அரசு மருத்துவமனைகளில் பணிக்குக் காலை 8 மணிக்கு வந்தால் 3 மணிக்குப் பணி முடிகிறது அதிலும் ௧ மணி நேரம் இடைவேளையும் உண்டு ஆனால் இவர்கள் காலையில் 9 மணிக்கு வருவது 12 மணிக்கே தனியார் மருத்துவனைக்ளுக்கு சென்றுவிடுவது எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. அப்படி சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கேன்சர் மருத்துவராக பணிபுரியும் அருண் ரமணன் தனியார்  மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது. கிண்டி மருத்துவமனையில் பணிபுரியும் பாலாஜி 11 மணிக்கு பணிக்கு வருவது 1 மணிக்கே கிளம்பி பள்ளிக்கரணை உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று விடுவது மேலும் மதுரை மருத்துவமனையில் பணிபுரியும் ராஜ்குமார் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்வது. மேலும் ஒருபடி மேலே சென்று சொந்த மருத்துவமனைகயே வைத்துள்ளார் ஜெபசிங் ஆசீர்வாதம். இப்படி அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் சட்டத்திற்குப் புறமாக செயல்பட்டு வருகிறார்கள். ஒருபுறம் அமைச்சர் சுகாதாரத்துறையை மேம்படுத்தி மக்கள் நலன் செய்யத் துடித்தால் மறுபுறம் மருத்துவர்கள் அரசுப் பணிக்கு வந்துவிட்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவப்பெயரை உண்டாக்கி வருகிறார்கள். 

இது குறித்துப் பேசிய மக்களும் அரசு ஊழியர்களிடமும் கேட்ட போது காலையில் 9

tn-sec

மணி முதல் 11 மணிக்கு மேல் மருத்துவர்கள் இருப்பதே இல்லை, மேலும் கேட்டால் மருத்துவர் கிளம்பிவிட்டார் நாளைக்கு வாங்க என கம்போணட்ர் சொல்வது வழக்கமாகிவிட்டது. இது வெறுமனே கேன்சர் துறையில் மட்டும் நடக்கும் பிரச்சனை இல்லை அத்துறையிலும் நடக்கிறது அனைத்து மருத்துவர்களுமே ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியவே சென்றுவிடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் பணி வேண்டாம் என்றால் இவர்கள் ஏன் அரசுப் பணிக்கு வருகிறார்கள். இங்குள்ள சம்பளம் பத்தவில்லை என்றால் இவர்கள் தனியார் மருத்துவமனையிலே வேலைக்குச் சென்றுவிடலாமே, ஆனால் இரண்டிலும் பணிபுரிந்துகொண்டு மாதம் 10 லட்சத்திற்கு மேலாக மாத ஊதியமாகப் பெற்று வருகின்றனர். இதில் ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளே வைத்துள்ளனர். இது போன்ற சிக்கலே மருத்துவர்களின் மேல் தாக்குதலையும் நடத்துகின்றனர். நீங்கள் சொல்லும் கேன்சர் மருத்துவர் கிண்டியில் பணிபுரியும் பாலாஜி மீது கத்திகுத்து நடந்த காரணமும் இதுதான்  இந்த பிரச்சனைகளை முழுமையாக மருத்துவர்களை சீரமைத்தால் பாதி பிரச்சனைகளை நிச்சியம் செய்யமுடியும் எனக் கூறுகின்றனர். 

அமைச்சர் சுகாதாரத்துறையில் எவ்வளவு புதுமையான திட்டங்களைக் கொண்டுவந்து மக்களுக்காக நடைமுறைப்படுத்தினாலும், அது மருத்துவர்கள் சரிவரச் செயல்படாவிட்டால் இவை அனைத்தும் கேள்விக்குறியாகவிடும், ஆகையால் உடனடியாக அரசு இது போன்ற மருத்துவர்களைக் களையெடுக்குமா அரசு!.

Doctors govt hospital Ma Subramanian tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe