'Do you want to pay taxes...?' - Old iron merchants grumble Photograph: (steel)
தமிழ்நாடு பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ''நாங்கள் பழைய இரும்புகளை கொள்முதல் செய்து அதை கம்பி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் அதிகமாக கொள்முதல் செய்யும் பொருட்கள் எங்களுடைய வணிக நிறுவனத்துக்கு கொண்டு வராமல் பில் டூ சிப் என்ற முறையில் விற்பனை செய்கிறோம். கொள்முதல் செய்யும் இடத்தில் எங்களுக்கு எடைச்சீட்டு மற்றும் ஜி.பி.எஸ். இருப்பிட புகைப்படம் தரப்படுகிறது. இந்த முறையில் தான் கொள்முதல் மற்றும் விற்பனை செயது வருகிறோம்.
சமீப காலமாக எங்களுக்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து நிறையக் கடிதங்கள் வருகின்றன. அந்த கடிதங்களில் நாங்கள் கொள்முதல் செய்த இடத்தில் தற்போது விற்பனை செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர்கள் அங்கே விற்பனை செய்யவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே நீங்கள் எடுத்த உள்ளீட்டு வரி தவறானது. அதை நீங்கள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று உள்ளது. கடிதம் கிடைப்பதற்கு முன்னரே எங்களுடைய உள்ளீட்டு வரி பிளாக் செய்யப்படுகிறது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisment
Follow Us