Advertisment

இதேபோல் தனியார் பள்ளிகளில் கேட்க துணிவு உள்ளதா?-அரசாணையை ரத்து செய்த நீதிமன்றம்

5945

madurai Photograph: (govt school)

அரசுப் பள்ளிகளில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க வேண்டும் என வெளியிடப்பட்டிருந்த அரசின் அறிவிப்பாணையை  உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அரசுப் பள்ளிகளில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அமீர் ஆலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கப்பதன் மூலம் மாணவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா? தாய், தந்தை சிறையில் உள்ளனரா? அகதிகளா? என்று விவரங்களை சேகரிக்க முயற்சி நடக்கிறது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குறிப்பிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த இந்த தகவல் சேகரிக்கப்படுவதாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 

Advertisment

வாதங்களைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கூறும் 'சிறப்புக் கவனம்' என்னவென்று குறிப்பிடப்படவில்லை. மாணவர்களின் தகவல்கள் உணர்வுபூர்வமானவை அவற்றை சேகரிப்பது மாணவர்களின் உரிமையை பாதிக்கும் செயல். இதுபோன்ற பின்னணி உடைய மாணவர்களை இந்த நடவடிக்கை மனச்சோர்வுக்கு உள்ளாக்கும். தனியார் பள்ளிகளில் இதுபோன்று கேட்க துணிவு உள்ளதா? இது உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறுவதாக உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

govt school madurai high court tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe