Advertisment

திமுகவின் 'தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை!

ttt

தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 1 ஆம் தொடங்கிய திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறுகிறது. 

Advertisment

திமுகவின் தலைமைக் கழகம் நியமித்துள்ள 22 நட்சத்திரப் பேச்சாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்கூட்டங்கள், பகுதி முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் என்று கடந்த 3 நாட்களாக இந்தப் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. 

Advertisment

இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இந்தப் பரப்புரை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர், இராயபுரம், நிலக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட 23 தொகுதிகளில் இந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்துள்ளன. 

இதில், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களான அமைச்சர்கள் கோவி செழியன், இராஜ கண்ணப்பன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் பொன். முத்துராமலிங்கம், திண்டுக்கல் லியோனி, எம்.எம். அப்துல்லா, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட மேலும் சிலரும் பொதுக்கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வருகிறார்கள். இவற்றில் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதுவரை 2000 க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுடன் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்கள். திமுகவின்  தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை மிகத் தீவிரமாக நடந்துவருகிறது.

election campaign dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe