Advertisment

திமுகவின் வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டம் - தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

CM

தமிழ்நாட்டிற்கு அனைத்து வகைகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜகவை எதித்துப் போராடி தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறது திமுக. தமிழ்நாட்டிற்கு பாஜக  செய்துள்ள வஞ்சகங்களைச் சுட்டிகாட்டி   ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு மூலம் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் திமுகவில் இணைத்தது.

Advertisment

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்யவேண்டிய பணிகளைக் குறித்து விவாதித்து அவற்றைத் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான பயிற்சிக் கூட்டம் இன்று (28.10.2025) காலை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். 

Advertisment

பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள்,  நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட 3000 நபருக்கும் மேற்பட்ட திமுக  நிர்வாகிகள் பங்கேற்றுப் பயிற்சி பெற இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதையும், வரவிருக்கும் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதையும் மையமாகக் கொண்டு இந்தப் பயிற்சிக் கூட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்காகக் கொண்டு வரப்படும் S.I.R எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. 

இந்தப் பயிற்சிக் கூட்டத்திற்குப் பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாக மகளிரணி, கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும்  ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்ச்சி நடை பெற உள்ளது

•இந்தப் புதிய முன்னெடுப்பின் மூலம் நான்காண்டு காலத் திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்லி, மாநில அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பெற்ற பயன்களை உறுதிசெய்ய இருக்கிறார்கள், தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் துரோகத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க இருக்கிறார்கள்.

தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க் கட்சிகள் பலவீனமாக உள்ள நிலையில்  மிகத் தீவிரமான உறுதியான நடவடிக்கைகளால் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளது திமுக. வாக்குச் சாவடி அளவில் மக்களைச் சந்திக்கும் இந்த முன்னெடுப்பின் மூலம் மக்களுடனான தொடர்பை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள இருக்கிறது.

இந்நிகழ்வில் பேசிய முதல்வர் “ என்னோட அழைப்பை ஏற்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்க மாவட்டத்துக்கு - நகரத்துக்கு - கிராமத்துக்கு – எடுத்துச் செல்லுங்கள். நான் சொன்னதை சொல்லுங்க. நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்க. ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா  சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவங்களதான் நம்பி இருக்கேன்-னு சொல்லுங்க. தொண்டர் இருக்குற தைரியத்துலதான் தலைவர் இருக்கார்னு மறக்காம சொல்லுங்க.

நம்மோட இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம். உங்களோட உழைப்பால, ஆறாவது முறையா ஆட்சிப் பொறுப்புல இருக்குற நாம, அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்கணும்! அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம்” என்று கூட்டத்தில் பேசினார்.

mahabalipuram dmk cm stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe