Advertisment

திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு!

3

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற முழக்கத்தை உண்மையாக்கும் வகையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறுகிறது. திமுகவின் 15 கழக மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகளுக்கு பயிற்சி. 

Advertisment

49 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். திமுகவின் தேர்தல் பரப்புரை பாடல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் சாதனைகளை விளக்கும் வகையில் முதலமைச்சரின் சட்டமன்ற உரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடபெற்று வரும் ’என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’கூட்டங்களின் அனுபவங்களை இன்று பகிர்ந்துகொள்கின்றனர்.

Advertisment

சென்னை மற்றும் விழுப்புரம் பொறுப்பாளர்கள்: ஆ. ராசா எம்.பி. மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். மாநாட்டிற்காக 10,00,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலில் மினி கிளினிக், மருத்துவக் குழுக்கள், தீயணைப்புத் துறை பாதுகாப்பு, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Conference Election dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe