சென்னை கே.கே நகரில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவர் பேசுகையில், ''210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ்க்கும் திமுகவிற்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் உடனடியாக கனிமொழி டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்திக்கிறார். சோனியா அம்மையாரை சந்திக்கிறார். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். திமுகவிற்கு அலுவலகம் டெல்லியில் தான் இருக்கிறது.
அதிமுக அப்படி அல்ல நம்முடைய கூட்டணியை மதித்து, அதிமுகவை மதித்து பாஜகவில் உயர்ந்த பதவியில் இருக்கின்றவர்கள் நம்முடைய நம்பிக்கையை எண்ணி, நம்பிக்கைக்கு உரியவர் என்று எண்ணி நம் சென்னைக்கு வந்து இங்கே கூட்டணி பேசி அப்பொழுதே அறிவித்தோம். உள்துறை அமைச்சர் இங்கே வந்தார் பேச்சுவார்த்தை நடத்திய உடனே கூட்டணி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் தெளிவாகச் சொன்னார் அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கப்படும். கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர் இபிஎஸ் என்று அப்பொழுதே தெளிவுபடுத்திவிட்டார். இது கூட்டணியின் வரலாறு. ஆனால் உங்களுடைய கட்சியில் கூட்டணி இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வார்த்தை போர் முற்றிவிட்டது.
உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினும் காங்கிரஸ் கை கொடுக்கும் என்று சொன்னார்கள். காங்கிரஸ் கையை விட்டு நழுவுற மாதிரி சென்று விட்டது. நிலைமை அதுதான். கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு முன்பு நம்மைப் பற்றி எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள். எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு கூவிக் கூவி அழைக்கிறார் என்று சொன்னார்கள், கிண்டலாகப் பேசினார்கள். அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்க இருக்கிறார்கள். நாம் கூட்டணி பேச்சுவார்த்தை முடிச்சாச்சு. திமுகவில் இழுபறியாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை. காங்கிரஸ் கட்சி திமுகவை ஏற்காத நிலை இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய தினம் திமுக தான் தடுமாறுகிறது. அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/788-2026-01-30-21-29-17.jpg)