பிரம்மாண்டமாக நடந்த திமுகவின் முப்பெரும் விழா நிகழ்வில் கொட்டும் மழையில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை அமைதி காத்து அந்த முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்தினர். அந்த மழையிலும் திமுக தொண்டர்கள் கட்டுக்கோப்பாக தலைவர்களின் பேச்சை அமைதியாக கேட்டு ஆர்ப்பரித்தார்கள்.
அப்படிப்பட்ட அந்த காட்சிகளில் மிக முக்கியமாக சமூகவலைத்தளங்களில் வைரலானது திமுகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தன்னுடைய குழந்தையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார். அந்த குழந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கைதட்டி ரசித்து ஆரவாரம் செய்த படங்கள் வைரலானது.
திமுகவின் நிர்வாகிகள் அனைவரும் திமுக என்ற கட்சி ஒரு வலிமையான கட்சி என்பதற்கு இந்த காட்சி தான் சான்று என்று சொல்லி வந்தார்கள். அந்த குழந்தை மற்றும் அவரது பெற்றோர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர்கள். குழந்தையின் தந்தை ரத்தையிர், ஈரோடு மத்திய மாவட்ட சிறுபான்மை நல பிரிவில் துணைச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த குழந்தையின் பெயர் ஆலியா. அந்த மழையிலும் திமுக தலைவரின் பேச்சை கை தட்டி ஆரவாரம் செய்தது. அந்த குழந்தை யார் என்று தேடி வந்த நிலையில் அந்த குழந்தையின் விவரம் தெரிந்ததும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அந்த குழந்தையை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்கள்.