திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று 22.12.2025 காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியுள்ளது. மூன்று முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு தொழில் முனைவோர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அமைச்சர்கள் பி.டி.ஆர்., கோவி செழியன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவில் கனிமொழி,  தமிழரசி உள்ளிட்ட இரண்டு பெண்கள் உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம். அப்துல்லா, டாக்டர் எழிலன் உள்ளிட்ட அறிவார்ந்த அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

டிகேஎஸ் இளங்கோவன், காண்ஸ்டண்டைன் ரவீந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் குழுவில் உள்ளனர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம் வன்னியர் பொது சொத்து நல வாரியத் தலைவராகவும், CMDA துணைத் தலைவராகவும் இருந்தார். சுரேஷ் சம்பந்தம் திராவிட சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட முதல் தலைமுறை தொழில் முனைவோர். கனவு தமிழ்நாடு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.