திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தலைமையில் இன்று (29-12-25) திருப்பூரில் திமுகவின் மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெறவுள்ளது. ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் நடக்கும் இந்த மாநாட்டில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

Advertisment

இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், மாநில அளவிலான மகளிர் நிர்வாகிகள், மேற்கு மண்டல சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது. இம்மாநாட்டில், 39 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 1.50 லட்சம் பெண்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இன்று மாலை 4 மணிக்கு மேல் தொடங்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க இன்று காலை முதல் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.