திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' எனும் தலைப்பில் திமுக மகளிர் மேற்கு மண்டல மாநாடு இன்று நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,''கருப்பு சிவப்பு கடல் போல ஒரு இடத்தில் பெண்கள் கூடியிருப்பதாக வரலாறு இருக்காது. இப்படி உங்களைப் பார்க்கவே பவர்ஃபுல்லாக இருக்கிறது. உமென் பவரில் திமுக மீண்டும் பவருக்கு வரப் போகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. இப்படி ஒரு பவர்ஃபுல் மாநாட்டை மிகச் சிறப்பாக இந்த மாநாட்டுப் பணிகள் எல்லாம் முழுமையாக தன்னுடைய தோளில் சுமந்து வெற்றி வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டி இருக்கக்கூடிய ஆற்றல் மிக்க செயல் வீரர் செந்தில் பாலாஜிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த மாநாட்டிற்கு தலைமை ஏற்று இருக்கும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் மகளிரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் என்று வந்து விட்டாலே திமுகவினுடைய தேர்தல் அறிக்கை ஒரு ஹீரோ. அந்த ஹீரோவை தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி ஏற்று இருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை அவர் செய்த பொழுது அதில் வெற்றி பெற்றோம். நிச்சயம் உறுதியாகச் சொல்கிறேன் வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறோம் அதுவும் உறுதி.
பெண்களின் முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம். பெண்களின் வெற்றியே சமூகத்தின் வெற்றி. அடிமைத்தனத்தை பிரேக் செய்து பகுத்தறிவு சுடரைக் கையில் ஏந்தி பெரியார், அண்ணா, கலைஞர் கட்டி எழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் நடைபெறுகிறது. திமுக ஆரம்பிக்கப்பட்ட தொடக்கத்தில் இருந்து பெண்கள் முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்கள். இந்த மகளிரணியின் தொடக்கம் இது தெரியுமா? பெண்களுக்கான ஒரு தனி அமைப்பு வேண்டும் என்று அண்ணா 1956 ஆம் ஆண்டு திமுகவின் மகளிர் மன்றத்தைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து மகளிர் மன்றத்தை மகளிரணி ஆக விரிவாக்கி வலுவான உருவாக்கினார் கலைஞர். மிகப்பெரிய மாநாடுகளை நமது மகளிரணி நடத்தி இருக்கிறது. அதனுடைய தொடர்ச்சி தான் நீங்கள் எல்லோரும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/5922-2025-12-29-18-53-26.jpg)