Advertisment

பட்டியல் சமூக நிர்வாகி; கொலை மிரட்டல் விடும் திமுக ஒன்றிய செயலாளர்!

aa1

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள சாதிய பிரச்சனை நீடித்து வரும் நிலையில் தற்போது பேனரில் போட்டோ போடுவதிலும் பிரச்சனை உருவாகி, அப்போது பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisment

தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் மணியின் ஆதரவாளராக இருப்பவர் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் மல்லமுத்து. இவர் கட்சி நிர்வாகி ஒருவருடன் செல்போனில் பேசும்போது, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை சாதிப்  பெயரை சொல்லி ஆபாச வார்த்தைகளில் தரக் குறைவாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பட்டியல் சமூக மக்களிடையே மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. 

Advertisment

இது மட்டுமல்லாமல் கொங்கு பகுதியைச் சார்ந்த மாரியப்பன் என்பவரை சரமாரியாக தரக்குறைவாக பேசிய ஆடியோவும் வெளியாகி தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திராவிட மாடல் அரசு என்கிற பெயரில் நல்லம்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி. மல்லமுத்து  இது போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார். ஆனாலும் இதை திமுக தலைமை நிர்வாகம் கண்டுகொள்ளாத மௌனம் காக்கிறது 

இது குறித்து திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நம்மிடையே பேசிய போது  “திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் அதிக அளவில் திமுகவின் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள். திமுகவுக்கு பட்டியல் சமூக மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாது. ஆனால்  ஒன்றியம் முதல் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள், எம்பி முதல் கொண்டு மாவட்ட செயலாளர்கள் வரை பலர் பட்டியல் சமூக மக்களை படு கேவலமாக பேசுகின்றனர்.இந்த ஆடியோ வெளிவந்துள்ளது.பல ஆடியோக்கள் வெளிவராமல் உள்ளது. ஒவ்வொன்றாக வெளிவரும் என தெரிவித்தனர்.

dmk dharmapuri vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe