திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவிரேணுகா தேவிகாலமானார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுஎம்.பி.யின்மனைவியும், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமானரேணுகா தேவி(வயது 80) காலமானார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (19.08.2025) உயிரிழந்தார்.   
Advertisment
அவரது உடல் இறுதி மரியாதைக்காகச் சென்னைதியாகராயநகரில்உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 5 மணியளவில்பெசன்ட்நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தியும், இரங்கல்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.