சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறது திமுக. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் திமுக நிர்வாகிகள் மாநாடு இன்று நடக்கிறது. முன்னதாக இந்த மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. திமுகவினர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிடும் பொருட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடுகள் எனத் தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது திமுக. இந்த மாநாடுகள் ஒவ்வொன்றிலும் 1 லட்சம் – 1.5 லட்சம் வரையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் 'ஓரணியில் தமிழ்நாடு', 'வெல்லும் தமிழ் பெண்கள்' என வீடு வீடாக பரப்புரையை திமுக மேற்கொண்டது. இவை எல்லாம் வெறும் டிரெய்லர் தான். வரும் மார்ச் 9 திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கூடும் மாபெரும் கழக நிர்வாகிகள் மாநாடு தான் மெயின் பிக்சரே என அறிவித்திருந்தார் ஸ்டாலின். இந்நிலையில் இன்று மாலை திருச்சி சிறுகனூர் மாநாடு தொடங்கியுள்ளது. திமுக அமைச்சர்கள் மேடையில் குவிந்துள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் வந்துள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த ஓபிஎஸ் திமுக துண்டு அணியாமல் மேடைக்கு வந்த நிலையில் அங்கிருந்தவர்கள் திமுக துண்டை அணிவித்து மேடையில் அமர வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/09/1048-2026-03-09-17-55-31.jpg)