இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''அடுத்த தேர்தல் வருவதற்கு முன்பு மக்கள் எங்களை மகிழ்ச்சியாக வரவேற்கின்றனர். எப்பொழுதுமே அடுத்த தேர்தல் வருவதற்கு முன்பு ஆளுங்கட்சி மீது ஒரு அதிருப்தி நிலை ஏற்படும். ஆனால் எங்களை மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். சிறு சிறு குறைகளை எங்களிடம் சுட்டிக் காட்டுகிறார்கர்களே தவிர கோவப்படுவதில்லை. அந்த குறைகளையும் நிறையாக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதனால்தான் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம் எங்கும் ஓடி ஒழியவில்லை.
ஊடகத்தினர் தினம் தோறும் எங்களை பின் தொடர்ந்து வருகிறீர்கள். ஏழு மணிக்கு பார்த்தாலும் நாங்கள் களத்தில் இருக்கிறோம். 11 மணிக்கு பார்த்தாலும் நாங்கள் களத்தில் இருக்கின்றோம். மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்திற்கு 2026 பெரிய அளவில் வெகுமதி அளிப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'திமுக ஃபெயிலியர் ஆகிவிட்டது. வியாசர்பாடியில் பள்ளி மாணவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்' என்ற கேள்விக்கு, ''நீங்கள் பொதுநோக்கோடு சொல்லுங்கள். அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் தவறுகளைக் கண்டறிவது யார்? காவல் துறையும் இந்த அரசும் தான். அரசு அனுமதிக்கிறதா? குற்றம் நடப்பதற்கு முன்பாகவே அதனைத் தடுக்கும் முயற்சிகள் ஈடுபடுகிறோம். சம்பவங்களை உடனடியாக கண்டுபிடித்து குற்றவாளிகளின் கைது செய்து அதற்கு உண்டான தண்டனையை வழங்குகின்றோம். அதில் இன்னார் இனியவர் என்று பார்ப்பதில்லை. ஆகவே நீங்கள் சொல்லுகின்ற தவறைக்கூட காவல்துறை தான் கண்டுபிடித்தது. எடப்பாடி பழனிசாமியா கண்டுபிடித்தார்? குற்றம் இல்லாத ஒரு சமுதாயமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் உடற்பயிற்சி கூடங்கள், பார்க்குகள், விளையாட்டு பயிற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/04/839-2026-02-04-10-28-35.jpg)