Advertisment

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்!

lg

DMK senior leader L. Ganesan passes away

திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான எல்.கணேசன் (92) உடல்நலக்குறைவால் இன்று (04-01-26) காலமானார்.

Advertisment

தஞ்சாவூர் உரத்தநாட்டைச் சேர்ந்த எல்.கணேசன், ‘மொழிப்போர் தளபதி’ என்று அழைக்கப்பட்டவர். எல்.ஜி என அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்படும் இவர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், வைகோ உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். பல்வேறு மொழிப்போர் காலகட்டங்களிலும், மிசா போராட்டம் உள்ளிட்டவற்றிலும் கலந்துகொண்ட இவர், கிட்டத்தட்ட மூன்று முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்எல்சியாகவும், ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.

Advertisment

திமுக உயர்நிலைத் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், ஒரத்தநாடு தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர், திமுகவில் இருந்து பிரிந்த வைகோ மதிமுகவை தொடங்கியபோது திமுகவில் இருந்து விலகி மதிமுகவிற்கு சென்றார். அப்போது மதிமுக சார்பில் திருச்சி எம்.பியாக பதவி வகித்தார். 

அதன் பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக பல ஆண்டு காலமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார். வீட்டில் எந்தவொரு அசைவும் இன்றி வீட்டிலேயே இருந்த இவர், இன்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை காலை எல்.கணேசனின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் அவர் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி கீழையூரில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe