Advertisment

கேட்டதைக் கொடுத்த திமுக; தேமுதிகவுக்கு அடித்த ஜாக்பாட்!

premalatha

DMK reserved one Rajya Sabha seat for DMDK

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி போன்ற விவகாரத்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisment

இதற்கிடையில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து 1 சீட்டை கூட்டணி கட்சிகள் தானம் செய்ய வேண்டும் என்று திமுக குழுவினர் கூறியதாக தகவல் வெளியானது. அதன்படி கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை, பேச்சுவார்த்தை மூலம் குறைத்து சீட்டை திமுக ஒதுக்கி வருகிறது. இதில் காங்கிரஸ் 35+ சட்டமன்ற இடங்கள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டு கேட்டதாகவும், அதற்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் எனவும் திமுக கரார் காட்டி வருகிறது.

Advertisment

இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை மறுநாள் (05-03-26) நிறைவடையவுள்ள நிலையில் திமுக தங்களது வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. தொகுதி பங்கீட்டு உடன்படிக்கைக்கு ஒத்துழைத்தால் 1 மாநிலங்களவை சீட்டு தரப்படும் என்ற ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு இன்று வரை திமுக கெடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றுள்ளது. இன்று தேமுதிக குழுவினர், திமுக குழுவினருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்த திமுக ஒரு ராஜ்ய சீட்டை ஒதுக்கியுள்ளது. தேமுதிக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், தேமுதிகவின் முதல் எம்.பியாக விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிகவின் பொருளாளருமான எல்.கே.சுதீஷ் பதவியேற்கவுள்ளார். 

Rajya Sabha dmdk premalatha vijayakanth dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe