DMK peaceful rally towards Anna Memorial Photograph: (dmk)
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள் தான் எங்களுக்கு
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்! ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு திமுக அமைதிப் பேரணி மேற்கொண்டுள்ளது. மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடம் நோக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலரும் அமைதி பேரணி நடத்தி வருகின்றனர்.
Follow Us