திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம்

A4462

DMK MPs consultative meeting Photograph: (Stalin)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தி.மு.க தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

திமுக எம்பிக்கள் நாடாளுமன்றக்  கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும்; எந்தெந்த விவகாரங்களில் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

 

ரயில் கட்டண உயர்வை எதிர்த்துத் திரும்பப்பெற வைப்பது; கீழடி ஆய்வறிக்கை மத்திய ஏற்க மறுக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பது; தமிழ்நாட்டுக்கான நிதி தொடர்பான கேள்விகளை எழுப்புவது; வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்; ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்புதல் உள்ளிட்டவை குறித்து திமுக எம்பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

dmk dmk mp m.k.stalin parliment
இதையும் படியுங்கள்
Subscribe