திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து திமுக எம்.எல்.ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டு முத்தையன் கோயில் நகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் அதிகரித்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
குப்பைகள் அதிகரித்ததால் நோய் தொற்று அபாயம் இருப்பதாகவும், அதனால் அதனை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர். ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ செல்வராஜ் அந்த பகுதியின் வழியாக வந்துள்ளார். அவரை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தனர். அதனை கேட்ட எம்.எல்.ஏ செல்வராஜ், பொதுமக்களுடன் சேர்ந்து அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எம்.எல்.ஏ செல்வராஜுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குப்பைகளை அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து செல்வராஜ் அங்கிருந்து சென்றார். இதனையடுத்து மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் இருந்து அனைத்து குப்பைகளும் அள்ளி செல்லப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/tharna-2026-01-05-14-54-19.jpg)