Advertisment

“முதல்வரை இங்கே உட்கார விடக்கூடாது, டெல்லியில் தான் உட்கார வைக்க வேண்டும்” - தி.மு.க. எம்.எல்.ஏ. கலகல பேச்சு!

vilathikulam-dmk-pro1

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசினை கண்டித்தும், அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் கேள்வி கேட்காமல் வாய் மூடி மெளனம் காத்து வரும் அ.தி.மு.க.வை கண்டித்து தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசுகையில், “பா.ஜ.க கொண்டு வந்துள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஒரு மோசமான திட்டம். மகாத்மா காந்தி இப்போது இருந்தால். அவ்வளவுதான் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இப்படி மன்னிக்க முடியாத குற்றவாளிகளை நீங்கள் தொடர்ந்து தண்டித்துள்ளீர்கள். மூன்று தேர்தல்களில் அவர்களை தோற்கடித்துள்ளீர்கள். அவர்களை வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும். தி.மு.க வெற்றி பெற்றால் தான் மத்தியில் தேர்தல் வரும். அடுத்த முறை சரி செய்து விடலாம். நம்முடைய தலைவரை (மு.க.ஸ்டாலின்) இங்கே உட்கார விடக்கூடாது (தமிழ்நாடு). சென்னையில் உட்கார்ந்து இருந்தால் அவர்கள் (பா.ஜ.க) சரிப்பட்டு வர மாட்டார்கள். ஆகையால் அவரை டெல்லிக்கு அனுப்பி விடுவோம். 

Advertisment

அப்போதுதான் அவர்கள் சரிப்பட்டு வருவார்கள். தேர்தல் களத்தின் லகான் உங்கள் கையில் தான் உள்ளது. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பிரச்சனையில் இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் என்ன நிலையை பின்பற்றினார்களோ அதே நிலைய தான் தற்போதைய அரசும் பின்பற்றியது. திருப்பரங்குன்றம் விவகாரம் மூலமாக நாம் வங்கதேசம் போல அடித்துக் கொண்டு செத்து விடுவோம் என்று மோடி நினைத்தார். மணிப்பூரில் இரு சமூகத்திற்கு இடையே உள்ள பிரச்சினை போல் வரும் என்று நினைத்தனர் ஆனால் இங்கு ஒரு உயிரிழப்பு கூட இல்லை. அதுவும் அவர்கள் (பா.ஜ.க) கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் தற்கொலை செய்து கொண்டார். 

vilathikulam-dmk-pro

யாருடைய தூண்டுதல் காரணமாக. என்று தெரியவில்லை. மோடி எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும் இங்கே அந்த பருப்பு வேகாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார். தி.மு.க எம்.எல்.ஏ.வின் கவர்ச்சியான இந்த பேச்சு, இப்டியெல்லாம் யோசிப்பாங்களா.. என கட்சியினரைக் குஷிப்படுத்தியிருக்கிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மாறுபட்ட கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டப் பேச்சு தென் மாவட்டத்தில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது.

dmk Delhi DMK MLA mk stalin Tuticorin vilathikulam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe