தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இன்று (27-11-25) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.

Advertisment

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர், எம்.ஆர்.கே.பி கதிரவன் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும், இளைஞர்களுக்கு மட்டைப்பந்து, கைபந்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் , பொதுமக்களுக்கு மதிய உணவு, மருத்துவப் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம் கண்டறியும் கருவியை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட மருத்துவமனையில், இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகள் 6 பேருக்கு தங்க மோதிரம் அணிவித்தனர். வார்டுகளில் உள்ள குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பேபி கிட் தொகுப்பு வழங்கப்பட்டது. பின்னர் கட்சியின் இளைஞர் அணியினர், மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.

Advertisment

tai

இதேபோல், சிதம்பரம் அருகே உள்ள நான் முனிசிபல் ஊராட்சியில் திமுக குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் ஏற்பாட்டில் 500 பேருக்கு மா, தென்னை மர கன்றுகள், தையல் இயந்திரம், அயன் பாக்ஸ் தலா 3 பேருக்கு, ஊராட்சி தூய்மை பணியாளர்கள் 15 பேருக்கு சீருடை, போர்வை, மழைகோட், 120 கிரிக்கெட், வாலிபால் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், கட்சியின் மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் பரமானந்தம், மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணசாமி, இளைஞர் அணிச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் குட்டிமணி ஜெகன், அண்ணாமலைநகர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.