DMK members gather at 'Oraniyil Tamil Nadu' movement's pledge-taking meeting in Trichy Photograph: (dmk)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு முழுவதும் 68,000 மேற்பட்ட வாக்குச்சாவடி சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் சார்பில் 'தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்' என்ற தீர்மான ஏற்ப கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டத்தில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா (மாட்டு ஆஸ்பத்திரி அருகில்) நடைபெற்றது. திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் அனைவரும் தீர்மானம் ஏற்றுக் கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், சட்ட மன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதராஜ், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே. என்.சேகரன், பி.எம். சபியுல்லா, ந. செந்தில், பகுதி செயலாளர் டி. பி. எஸ். எஸ். ராஜ் முகமது, மற்றும் கழக நிர்வாகிகள் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேருவின் பேசுகையில், ''இன்று யார் யாரெல்லாம் கழகத்தைப் பற்றியும் கழக ஆட்சியைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அனைத்தையும் தாண்டி இந்தியாவிலே தொழில்துறை முதல் மாநிலமாக வளர்ந்து இருக்கிறது தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது. எப்படி இந்த ஆட்சி வருவதற்கு முன்பு மக்களின் அடிப்படைத் தேவைகளை பத்தாண்டு காலத்தில் செய்வோம் என சொன்ன தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளார். சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டி இருக்கிறார்.
இந்தியாவிலேயே நகர வளர்ச்சி நகர வளர்ச்சி பெற்றுள்ளது தமிழகம் தான். ஒன்றிய அரசு நூறு நகரங்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது. அதில் இந்தியாவில் 11 நகரங்கள் தமிழகத்தில் உள்ளது என்று சொன்னால் நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் குடியேறும் அளவிற்கு ஓதிய வசதிகளை செய்து தந்துள்ளோம்.
96-2001, 2006-11 கலைஞர் ஆட்சி செய்ததைப் போல யாராலும் ஆட்சி செய்ய முடியாது. அதேபோல் தற்போது தமிழக முதலமைச்சர் 2021-26 அனைத்து துறைகளிலும் முன்னணியாக தமிழகம் வந்துள்ளது. திமுக யாருக்கும் குறைவானவர்கள் இல்லை என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறது.
ஒரே இடத்திலே திமுக யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று நிரூபிக்கும் கூட்டமாக இந்த ஓரணியில் தமிழ்நாடு கூட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது. தெற்கு மாவட்ட கூட்டம் என்பது தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டான ஒரு கூட்டமாக அமைந்துள்ளது. திருச்சியில் உள்ள ஒன்பது தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி எள்முனை அளவு கூட குறையாமல் வெற்றி பெறும்''என்றார்.
Follow Us