திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் (Kartavya Dwar ) என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கர்தவ்ய த்வார் என்பதற்குத் தமிழில், ‘கடமையின் நுழைவு வாயில்’ என்று பொருள்படும்.
மும்மொழியில் வார்த்தை இடம்பெற வேண்டும். ஆனால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழியிலுமே, கர்தவ்ய த்வார் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்ததால் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழகத்தைச் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக மேயர் அன்பழகன் தலைமையிலான திமுகவினர் ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு, இந்தி வார்த்தை எழுதியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/hin-2026-03-04-16-37-53.jpg)