கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (09-11-25) சிதம்பரத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்திற்கு, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், திராவிட கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவாசகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் முகமது இஸ்மாயில்,  கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பு செயலாளர் வைபவ் வாண்டையார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியில் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் எஸ்.ஐ.ஆருக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், எஸ் ஐ ஆர் என்ற பெயரில் ஜனநாயக விரோத சட்டவிரோத நடவடிகைகளை தேர்தல் ஆணையம் செய்து வருவதை நிறுத்திட வேண்டும், இல்லாவிடில் அனைத்து கட்சிகள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது, அதன்படி வழக்கு போடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு வராமல் பா.ஜ.கவுக்கு ஆதரவாக தமிழ்நாட்டுக்கு கேடு விளைக்கும் துரோக செயலை செய்யும் விதமாக சில கட்சிகள் புறக்கணித்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

பாஜகவின் அரசியல் சதி திட்டத்திற்கு துணை போகும் விதமாக தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்தி வருவதை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக கூட்டணி இயக்கங்கள், திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நமது கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகரம் மஞ்ச குப்பம் தலைமை அஞ்சலகம் எதிரில் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் திரளாக கலந்து கொண்டு மிகப்பெரிய போராட்டமாக அமைய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து கூட்டணி கட்சிகளையும் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment