DMK issues notice of agitation in Lok Sabha Controversy over name of rural employment scheme
கிராமப்புற மக்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் விதமாக கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை கொண்டு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் இந்த சட்டத்தை அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்வதற்கான உத்தரவாதத்தை அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதோடு 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு 'விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி' என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதோடு 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தியில் பெயர் வைத்துள்ளதாகதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தை, மக்களவையில் இன்று (16-12-25) மத்திய அரசு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக மக்களவையில் இன்று திமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது தொடர்பான நோட்டீஸை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கி, பெயர் சர்ச்சை பற்றி விவாதிக்க வேண்டும், புதிய மசோதா தொடர்பான எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us