'DMK is not a movement that disturbs people by making jokes' - M.K. Stalin's letter Photograph: (dmk)
கரூரில் வரும் 17ம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'பழைய, புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுகவின் எக்கு கோட்டையை தொட்டுக் கூட பார்க்க முடியாது. 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவோம். மத்திய அரசு வஞ்சகத்தால் இழந்தவற்றையும் மீட்டு வருகிறோம்.
முப்பெரும் விழாவானது நம்மை நாமே ஊக்கபடுத்திக் கொள்ளும் திருவிழா. நான் இப்பொழுதும் விரும்புவது ஓய்வில்லா கழகப் பணிதான். உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளை தான். கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. கொள்கை இல்லாத கூட்டத்தைச் சேர்த்து கூக்குரல் இடுவதில்லை திமுக. அண்ணா, கலைஞர் புகழ் நிலைக்கட்டும். வெற்றி தொடரட்டும். 7 ஆவது முறையாக திமுக ஆட்சி அமைய கரூர் முப்பெரும் விழா வெற்றி பாதையாக அமையட்டும் ' என தெரிவித்துள்ளார்.