பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதில் பீகாரில் சுமார் 66 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இந்த நடவடிக்கையால் பட்டியல், பழங்குடி மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், பீகார் போன்று தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பான விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Advertisment

அந்த வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நவம்பர் 2ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க ஏற்கெனவே த.வெ.க, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. பா.ம.க சார்பில் கலந்துகொள்ளுமாறு பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்  ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை தீர்வு ஏற்படாத சூழல் நிறுவி வருகிறது. அண்மையில் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதே நேரம் தங்கள் தரப்பு தான் உண்மையான பா.ம.க என அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அன்புமணி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க பா.ம.க சார்பில் ராமதாஸ் பங்கேற்குமாறு திமுக அழைப்பு விடுத்திருப்பது அன்புமணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.