'DMK has seen beauty by giving award to Ponmudi who spoke obscenely' - AIADMK condemns Photograph: (admk)
அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வந்தனர். பொன்முடியின் பேச்சுக்கு திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது.
இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த நிலையில், பொன்முடிக்கு திமுகவில் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் பொன்முடிக்கு பதவி வழங்கியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள இந்த சமயத்தில், பெண்களை மிகவும் கொச்சையாக, ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அவார்டாக வழங்கி, அழகு பார்த்துள்ளது திமுக தலைமை.
ஆபாசமாக, அவதூறாக, இன ரீதியாக இழிவுபடுத்தி பேசினால் பெயருக்கு ஒரு நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்கள் சேர்த்து மீண்டும் அதே பதவி வழங்கப்படுவதே திமுக-வின் பார்முலா.
பள்ளி, கல்லூரி, ஏர்போர்ட் வரை எந்த பக்கமும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டின் ஆட்சியைத் தள்ளிய கட்சியான திமுக, இந்த நியமனத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களுக்கு சொல்ல வரும் செய்தி ஒன்று தான்: திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us