DMK executive act to Tragedy befalls 2-year-old child
2 வயது பெண் குழந்தை திமுக நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்ட கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரைச் சேர்ந்தவர் 28 வயதான சூர்யா. இவருக்கு லலிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் லலிதா வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சூர்யாவுக்கு தகவல் அளித்துவிட்டு லலிதா குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த சூர்யா, தனது குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் உடலில் மோசமான உள் காயங்கள் இருந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியானதை அடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதில் கணவரை பிரிந்து வாழ்ந்த லலிதா, திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் பெரியநாயகம் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி லலிதா வீட்டுக்கு வரும் பெரியநாயகம், சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாஅர். இதனால் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பெரியநாயகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us