Advertisment

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: 3 மாத களப்பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டல்!

dmk-ds-meeting-jan-21

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (20.01.2026) மாலை நடைபெற்றது. இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, சாமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Advertisment

அதில், “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றியை பறை சாற்றும் வகையில் மார்ச் - 8 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் 10 இலட்சம் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாபெரும் திமுக மாநில மாநாட்டை நடத்துவதென இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல முக்கிய அறிவுரைகளை வழங்கினார். 

Advertisment

அதாவது அடுத்த மூன்று மாதங்களில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ சந்திப்பு, மண்டல அளவிலான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக் கூட்டங்கள் மற்றும் திருச்சியில் நடைபெற உள்ள மாபெரும் மாநில மாநாடு ஆகியவற்றைச் சிறப்பாக நடத்துவது குறித்து முதலமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் கட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என அவர் தெரிவித்தார். மேற்கண்ட தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Assembly Election 2026 Thangam Thennarasu mk stalin District Secretaries dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe