Advertisment

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி விவகாரம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்!

india-today-mks

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஈடுபாடு காட்டியது. ஆனால், திமுகவில் கூட்டணி தொடர்பான குழு அமைக்கப்படாததால் காங்கிரஸ் சங்கடத்தில் இருந்து வந்தது. 

Advertisment

அதே சமயம் , காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சமீபத்தில் தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 71 மாவட்டத் தலைவர்களை அழைத்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை  நேற்று (10.02.2026) ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்ககட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி குறித்தும் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவதும் குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியானது.

Advertisment

இந்த கூட்டம் முடிந்த பிறகு செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களளைச் சந்தித்துப் பேசினர். அதில் செல்வப்பெருந்தகை, கூட்டணி தொடர்பாக திமுக இன்னும் குழு அமைக்காததால் காங்கிரஸ் தலைமை வருத்தமாக இருப்பதாகவும், இதனால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும், எனவே திமுக உடனடியாக தேர்தல் பணிக் குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் தலைமை ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்த பிறகு நாங்கள் டிசம்பர் 3ஆம் தேதி முதல்வரைச் சந்தித்தோம். இப்போது கிட்டத்தட்ட 70 நாள்கள் ஆகிவிட்டது. நாங்கள் 2 மாதங்களாக காத்திருக்கிறோம். 

congress--3m-team
கோப்புப்படம்

அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். நாங்கள் எந்தெந்த இடங்களில் போட்டியிட விரும்புகிறோம் என்று நாங்கள் தெளிவுப்படுத்த தயாராக இருக்கிறோம். ஆனால் துர்திஷ்டவசமாக அவர்கள் இன்னும் குழுவை அமைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஒருங்கிணைப்பு இல்லை, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. எங்கள் தொண்டர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளா எங்கள் தலைவர்களும் மிகவும் வேதனையில் உள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தை ஏன் தொடங்கவில்லை என்று அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களிடம் கேட்கிறார்கள். அதனால் நாங்கள் தாமதிப்பது போல் தெரிகிறது. ஆனால் நாங்கள் தாமதிக்கவில்லை. நாங்கள் ஏற்கெனவே முதல்வரைச் சந்தித்துப் பேசியிருக்கிறோம். மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு வருகிறோம். ஆனால், எதுவும் முன்வரவில்லை. 

மிக விரைவில் தேர்தல் வரவுள்ளதால் மிகவும் வருத்தமளிக்கிறது எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். எங்களுக்கு போதுமான நேரம் தேவை. இந்த பேச்சுவார்த்தை தொடங்காததற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையை தொடங்கும் என திமுக தலைமைக்கழக அறிவித்தது. இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக  தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக -காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. 

mks-4

ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும், அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். இது இடையில் சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.

Assembly Election 2026 Alliance congress dmk Rahul gandhi mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe