அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன் தினம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். 

Advertisment

கூட்டம் தொடங்குவதற்கு முன், காரியாபட்டி சேர்மன் செந்திலின் சகோதரர் சௌந்தருக்கு சொந்தமான கார் கூட்டத்திற்குள் நுழைந்தது. காவல்துறையினர் எச்சரித்தும் கார் உள்ளே சென்றதால், அதிமுகவினர் காரைத் தடுத்து அதன் கண்ணாடியை உடைத்தனர். 

அப்போது, காரை சௌந்தரின் மகன், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன், ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால்,  உடல்நிலை சரியில்லாத சிறுவனை மருத்துவனைக்கு அழைத்து செல்வதற்காகதான் கூட்டத்திற்குள் கார் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது காரை சிறுவனே ஓட்டி வரும் வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவின் அடிப்படையில், காரை சிறுவன் இயக்கினாரா என காரியாபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.