தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த திட்டங்கள் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து  இந்த வழக்கில் தலைமை நீதிபதி கட்ந்த 01ஆம் தேதி (01.08.2025) பிறப்பித்த உத்தரவில், “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசுத் திட்டத்தின் பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது ஆகும்.

எனவே தமிழக அரசு புதிதாகத் தொடங்க உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வருடைய புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது. அதே சமயம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை கோரி அதிமுக அளித்த புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது” என உத்தரவிட்டடிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்ததிருந்தார். 

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் இன்று (06.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில், “இந்த திட்டங்கள் அனைத்துமே மக்களுக்குச் சென்று சேரும் திட்டங்கள் ஆகும். 900க்கும் மேற்பட்ட அதிகமான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் போது பல்வேறு திட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றன. இதற்கு முன்னரும் பல்வேறு தலைவர்களின் படங்கள், இது போன்ற விளம்பரங்கள் இடம் பெற்றன. 

Advertisment

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்றோரின் படங்கள் எப்படி இடம் பெற்றுள்ளதோ அதேபோல அதற்கான விதிப்படி தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற மாநிலங்களவையின் திமுக உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்த் தரப்பு அளித்த மனு அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய 2 பதிவுகளும் திருப்பி அனுப்பப்பட்டதை ஜூலை 18 மற்றும் 21ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்டன. திட்டங்களைப் பிரபலப்படுத்தப் பிரதமர், முதல்வரின் படங்கள் மற்றும் பெயர்கள் இடம் பெறுவது வழக்கமானது தான்” எனத் தெரிவித்தார். அதோடு தமிழக அரசின் விளம்பர மாதிரிகளைத் தலைமை நீதிபதியிடம் திமுக தரப்பு வழங்கியிருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.