DMK alliance struggle against BJP and AIADMK
கடலூர் மாவட்டத்தில் ஒன்றியபட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் சிதம்பரம் நகர நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம், காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசையும், அதிமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதே போல் அதேபோல் கடலூர் சுற்றுவட்ட பகுதி, சிதம்பரம் சுற்றுவட்ட பகுதி, அண்ணாமலை நகர், ஓமக்குளம், லால்புரம், ஓமக்குளம், காட்டுமன்னார்குடி, திருமுட்டம், குறிஞ்சிப்பாடி, வடலூர் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Follow Us