மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நாளை மறுநாள் (05-03-26) நிறைவடையவுள்ளது. திமுக கூட்டணியில் நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தேமுதிக மற்றும் காங்கிரஸுக்கு தலா 1 மாநிலங்களவை சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. அதில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் முன்னாள் மத்திய அமைச்சரான தம்பிதுரை அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பா.ம.கவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/dmkadmk-2026-03-04-21-50-04.jpg)