தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.
அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பி.எல்.ஏ. 2 மற்றும் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று (09.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே. சுதீஷ் எனப் பலரும் கலந்து கொண்டனர். அப்போது அக்கட்சியின் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தா. மாரி பேசினார்.
அதில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மேற்கு சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெறுகின்ற பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் பிரேமலதா விஜயகாந்துக்கும், கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷுக்கும் பார்த்தசாரதிக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப கோவம் கோவமா வருகிறது. எங்களுக்கு இந்த ஜெயில் எல்லாம் புதுசு கிடையாது. நான் கட்சிக்காக 3 முறை ஜெயிலுக்கு போயிருக்கிறேன்.
அண்ணனுக்கு (பார்த்தசாரதி) தெரியும். பார்த்தசாரதி கூடவும் ஜெயிலில் இருந்திருக்கிறேன். பத்திரிக்கையாளர்களை அடித்துத்தான் ஜெயிலுக்கு போனோம். மறுபடியும் சொல்கிறேன் ரொம்ப கோவம் வருகிறது. சரியில்லை. திருத்திக்கோங்க.... திருந்துங்கள். ரொம்ப எனக்கு டென்ஷன் ஆகிறது. நல்லா இல்லை. நாளைக்கு வீடு புகுந்து அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். கண்டிப்பாகச் சொல்கிறேன் நடக்கும். அவ்வளவுதான் சொல்கிறேன் நன்றி வணக்கம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/10/dmdk-ex-controversial-speech-2026-02-10-10-08-37.jpg)