கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீபாவளியையொட்டி டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத புரோக்கர்கள் போன்று செயல்படும் வெளி நபர்கள் மூலம் லஞ்சப்பணம் வசூல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்துள்ளது.
உடனடியாக அக்டோபர்-15ஆம் தேதி மாலை கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், அன்பழகன், காவல் குழுவினர் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலக ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் பண்ருட்டி வட்டார போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கணக்கில் வராத 1 லட்சத்து 88 ஆயிரத்து 100 ரூபாய் கைப்பற்றப்பட்டது கணக்கில் வராத பணம் கைப்பற்றது. குறித்து டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத புரோக்கர்கள் மற்றும் பண்ருட்டி வட்டார போக்குவரத்து பிரிவு அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/15/a5526-2025-10-15-22-05-22.jpg)