திமுக மருத்துவர் அணியின் மாநில துணைச்செயலாளரும், நுரையீரல் சிறப்பு மருத்துவருமான பால. கலைக்கோவன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''பொதுவாகவே அக்டோபர், நவம்பர் மாதங்களில், சுற்றத்திலுள்ள மாசு மற்றும் தூசிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் காற்று மண்டலத்திலேயே கலந்து இருக்கும். அதனால் தான் இந்த குளிர் காலங்களில் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் சற்று அதிகமாக காணப்படும். அதிலும் குறிப்பாக தீபாவளியின் போது பட்டாசு புகையினால் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் இன்னும் மோசமடைய கூடும். எனவே தீபாவளி சமயத்தில் ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பவர்கள் எப்படி தங்களையும், தங்கள் வீட்டு குழந்தைகள், பெரியவர்களை பாதுகாத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/16/a5543-2025-10-16-23-32-31.jpg)
முதலில் அவர்கள் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் வீட்டை சுத்தம் செய்யும் போது மூச்சுத் திணறல் உள்ளவர்கள் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், புஸ்வானம், சாட்டை , பாம்பு டேப்லெட் ,10000 வாலா போன்ற அதிகமாக புகை வெளிப்படும் பட்டாசுகளை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அவற்றில் அளவுக்கதிகமாக sulphur dioxide,aluminium oxide,cadmium,carbon monoxide ,barium,manganese போன்ற நச்சுப்பொருட்கள் உள்ளது. மேலும் சரவெடிகளை காற்றோட்டமான பகுதிகளில் மட்டுமே வெடிக்க செய்ய வேண்டும், மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பவர்கள் , எண்ணெய் பலகாரங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது.
அதிக எண்ணெய் மற்றும் காரவகை பலகாரங்கள் மூலம் கூட ஆஸ்துமா,copd அதிகரிக்கும், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் தீபாவளி நாட்களில் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்தல் வேண்டும். குறிப்பாக மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை (துணிக்கடை, Shopping malls,etc.)தவிர்த்தல் மிகவும் நல்லது. இச்சமயத்தில் தான் H1N1 swine flu (பன்றிக்காய்ச்சல்) நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது .ஆஸ்துமாவிற்கு பயன்படுத்தும் வழக்கமான மருந்துகள், இன்ஹேலர்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தீபாவளி அன்று பெரும்பாலான மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மூடியே இருக்கும். முதலுதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைகளை உடனடியாக அணுக வேண்டும்'' என்றார்.