District Collector unveils Jallikattu statue in thiruvallur
ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை அம்மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் வீரம் மிக்க பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் புதிய அத்தியாயமாக ஜல்லிக்கட்டு வீரர் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற பிரம்மாண்டமாக நிறுவப்பட்ட சிலையினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ரவுண்டானாவில் நிறுவப்பட்ட இந்த சிலையின் முன் நின்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Follow Us