தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்தான முடிவுகளை இறுதி செய்து வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தைகளையும் தவெக முன்னெடுத்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே, தவெக  தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதையடுத்து, தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்களை விரைவில் விநியோகிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

Advertisment

இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இன்று (06.02.2026) குவிந்தனர். சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவளுக்கான விருப்ப மனு இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விருப்ப மனுவைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அதன்படி, பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10000 மற்றும் தனித் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூ.5000 எனக் கட்சியின் பெயரில் டிடி எடுத்துத் தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Advertisment

இந்த நிலையில், சுமார் 5000 க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுவினை பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தின் அருகே குவிந்துள்ளதால், அப்பகுதி கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகத் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், கட்சியினர் தங்களது வாகனங்களை அப்பகுதியில் உள்ள வீடுகளின் அருகில் நிறுத்தி வருவதால், அவர்களுக்குப் போக்குவரத்து இடைஞ்சல்கள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.